தமிழனுக்கு மட்டுமே உள்ள ஒரே விழா "பொங்கல் விழா" - கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி பேச்சு


கோவை மாவட்ட காவல்துறை சார்பில் 'ஸ்ரீ தக்ஷா ப்ரோபெர்டிஸ்' à®®à®±à¯à®±à¯à®®à¯ மலைவாழ் மக்கள் இணைந்து நடத்தும் காட்டுப் பொங்கல் விழா ஆலந்துறை பகுதியில் உள்ள சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் கொண்டாடப்பட்டது.

காருண்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில் காருண்யா பகுதியை சுற்றியுள்ள 15 மலை கிராமங்களை ஒருங்கிணைத்து "காட்டுப் பொங்கல்" விழாவினை கொண்டாடினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி கலந்து கொண்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார்.



பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்:

பொங்கல் விழா என்பது தமிழனுக்கு மட்டுமே உள்ள ஒரே விழாவாகும். ஆனால் தமிழர்கள் மட்டும் இந்தவிழாவினை கொண்டாடுவது என்று சொன்னால் நிச்சியம் அப்படி இல்லை. உழவுக்கும், தொழிலுக்கும் மரியாதையை கொடுக்கும் விழா என்று சொன்னால் அதுதான் பொங்கல் விழா, இந்த உழவு என்பது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொங்கல் முதல்நாளில் உணவிற்கு ஆதாரமாக விளங்கும் வெளிச்சம் அதனை தருவது சூரியன். பொங்கல் விழாவின் கதாநாயகனாக இருப்பது அழிக்க முடியாத அந்த சூரியன். சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து பழங்குடியின மக்கள் அனைவரும் சூரியனை வழிபடுகின்றனர். இரண்டாவது நாளன்று நமது வாழ்வாதரதிற்கு அடிபடியாகவும், விவசாயத்திற்கும் உறுதுணையாகவும் இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாளாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்களை சந்திக்கும் இந்த நிகழ்வே காணும் பொங்கல் என நம் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை இவ்வாறாக கொண்டாடி வருகின்றனர். 



இது போன்ற சந்தோஷமான நிகழ்வுகளில் என்றுமே நாங்கள் உங்களை பார்க்கவேண்டும். இங்கு வந்திருக்கும் எங்கள் அதிகாரிகள் போலவே, இங்கு இருக்கும் சிறுவர்கள் உயர்பதவிகளுக்கு à®µà®°à¯à®™à¯à®•ாலத்தில் à®µà®°à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯. காடும் காட்டை சார்ந்த இடமாக இருக்கும் இடம், முல்லை ஆனால் இங்கு மலையும் மலைகள் சார்ந்த இடமாக உள்ள பகுதியில் காட்டுப் பொங்கல் கொண்டாடும் நாம் இதனை குறிஞ்சி பொங்கலாகவும் கொண்டாடலாம். உறவினர்களுக்கும் மேலாக நாங்கள் உங்களை பார்கின்றோம். தோளோடு தோள் கொடுத்து உங்களை நாங்கள் வழிநடத்துவோம். இதுபோன்ற இயற்கை சூழலில் உங்களுடன் இந்த ஆண்டு பொங்கல் விழாவினை கொண்டாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.



விழாவில், இசைநிகழ்ச்சிகள், நடனம் மற்றும் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மலைவாழ் மக்களுக்கு இடையே ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு என கபடி போட்டி, கயிறு இழுத்தல், ஒட்டப் பந்தையம் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. à®‡à®µà¯à®µà®¿à®´à®¾à®µà®¿à®©à¯ˆ, à®•ோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா பாரதி ஏற்பாடு செய்தார். வனத்துறை à®…திகாரி தினேஷ், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மோகன், நவாஸ் மற்றும் முத்தரசு துணை காவல் கண்காணிப்பளர்கள் ஊர் காவல் படையினர், காவல் ஆய்வாளர்கள், வன அலுவலர்கள் மற்றும் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...